தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/அபிமன்யு யானைக்கு அன்பு வழியனுப்பு விழா

அபிமன்யு யானைக்கு அன்பு வழியனுப்பு விழா

அபிமன்யு யானைக்கு அன்பு வழியனுப்பு விழா


PUBLISHED ON : ஆக 26, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2026 06:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு தசரா திருவிழாவின் கம்பீரக் அடையாளமாகவும், கர்நாடக மக்களின் அன்பைப் பெற்ற முதன்மை யானையாகவும் திகழ்ந்த 'அபிமன்யு' ஓய்வுபெறும் நிகழ்வு, பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

65 வயதை எட்டியதையொட்டி, வனத்துறை சார்பில் மலர் தூவி அரசு மரியாதையுடன் வழி அனுப்பி வைக்கப்பட்டது அபிமன்யு.Image 1612971கர்நாடக வனத்துறையின் விதிமுறைகளின்படி, 60 முதல் 65 வயதை எட்டும் யானைகளுக்குப் பலமான மற்றும் கடினமான பணிகளிலிருந்து ஓய்வு அளிக்கப்படும்.

அபிமன்யுவுக்கு தற்போது 65 வயது நிறைவடைவதாலும், அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டும் இந்த ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.Image 1612972காடுகளுக்குள் வனத்துறையினருக்குச் சவாலாக இருக்கும் காட்டு யானைகளைப் பிடிக்கும் 'கும்கி' பணிகளிலும், புலி பிடிக்கும் நடவடிக்கைகளிலும் பல ஆண்டுகள் திறம்படச் செயல்பட்ட அபிமன்யு.2020-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகள் மைசூரு தசரா விஜயதசமி 'ஜம்பு சவாரி' ஊர்வலத்தில் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை மிகக் கம்பீரமாகச் சுமந்து சென்று மக்களின் மனதை வென்ற யானையாகும்.

கர்நாடகாவின் மாநிலத் திருவிழாவான மைசூரு தசரா, சாமுண்டீஸ்வரி தேவி மகிஷாசுரனை வதம் செய்த வெற்றியைக் கொண்டாடும் 10 நாள் திருவிழாவாகும்.

விஜயதசமி நாளன்று நடைபெறும் 'ஜம்பு சவாரி' ஊர்வலத்தின் முக்கிய நிகழ்வே இந்த தங்க அம்பாரி தான். சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட இந்த அம்பாரி 750 கிலோ எடை கொண்டது. இந்த தங்க அம்பாரியின் உள்ளே மைசூரு நகரைக் காக்கும் தெய்வமான சாமுண்டீஸ்வரி தேவி உற்சவ மூர்த்தியாக இடம் பெற்றிருப்பார்.Image 1612973 முதல் 14 வரையிலான பயிற்சி பெற்ற யானைகள் பின் தொடர அபிமன்யு தங்க அம்பாரியில் இறைவியை சுமந்தபடி தலைமை வகித்து மைசூரு அரண்மனையிலிருந்து தொடங்கி பன்னிமண்டபம் வரையிலான சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும், நேரம்லட்சக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் கூடி நிற்க, கம்பீர நடைபோட்டு 5 கி.மீ தூரத்தைக் கடக்க சுமார் 2 முதல் 3 மணி நேரங்கள் ஆகும்.

அபிமன்யு தொடர்ந்து 6 ஆண்டுகள் தங்க அம்பாரியைச் சுமந்து சேவை புரிந்திருக்கிறது இதற்கான வழியனுப்பு நிகழ்ச்சி மிக நெகிழ்ச்சியாக மைசூரு வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மலர் தூவி கௌரவித்தனர், அபிமன்யு யானையின் சக யானைகள் ஒரு ஓரமாக நின்று தங்களது தலைவனை வழியனுப்புவது போல தும்பிக்கையை உயர்த்தி வழியுனுப்பின.இத்தனை ஆண்டுகள் அபிமன்யுவை நல்வழியில் வழிநடத்திய பாகன்களும், வனத்துறையினரும் கண்ணீர் விட்டு அழுதனர்.அந்த காட்சி அங்கிருந்த திரளான பார்வையாளர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது. காடுகளின் பாதுகாப்பிலும், மக்கள் திருவிழாவிலும் இணையற்ற சேவை புரிந்த அபிமன்யு, இனி தனது ஓய்வுக்காலத்தை மடிகேரியில் உள்ள துபாரே யானைகள் முகாமில் செலவிடப்போகும் அபிமன்யுவை நாமும் நம் பங்கிற்கு வாழ்த்தி வழி அனுப்புவோம்.

-எல்.முருகராஜ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us