உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 23, 2018

அ நிறம் | அளவு
வாஷிங்டனில் உள்ள கார்னெகி அறிவியல் கழக ஆய்வாளர் ஸ்கார்ட் ஷெப்பர்டு (Scott Sheppard), வியாழன் கிரகத்தில் மேலும் 12 நிலவுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
வியாழனைச் சுற்றி வரும் நிலவுகள் ஒவ்வொன்றும், வெவ்வேறு சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கின்றன. சில நிலவுகள் ஒரே பாதையைப் பகிர்ந்து கொள்வதும் உண்டு. வலேடுடோ (Valetudo) என்ற குட்டி நிலவின் பாதையில், வேறு நிலவுகளும் சுற்றுகின்றன. ஆனால், வலேடுடோ மட்டும் எதிர்த்திசையில் சுற்றுகிறது. எனவே, இது காலப் போக்கில் வேறு நிலவுகளுடன் மோதி அழிய வாய்ப்புள்ளது என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட 12 நிலவுகளையும் சேர்த்து, வியாழனில் மொத்தம் 79 நிலவுகள் உள்ளன.
