தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/3.65 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

3.65 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

3.65 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு


PUBLISHED ON : நவ 13, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.நா. சபையின் மனிதாபிமான அமைப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் நடத்திய ஆய்வின் மூலம், அங்கு 3 கோடியே 65 லட்சம் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

அங்கு நிலவி வரும் உள்நாட்டு மோதல்கள், பாதுகாப்பின்மை, தரமான உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொடர்ந்து ஏற்படும் வறட்சி போன்ற காரணங்களால் அம்மக்கள் உணவுப் பற்றாக்குறை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாழ வழியின்றி மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறுவதால், அங்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டு உணவுப் பற்றாக்குறை 18 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

இதில், உணவின்மை, ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் 5 வயதிற்கு குறைவானவர்கள் என்றும் ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us