காற்றில் தீட்டலாம் 3டி ஓவியம்!
காற்றில் தீட்டலாம் 3டி ஓவியம்!
காற்றில் தீட்டலாம் 3டி ஓவியம்!
காற்றில் தீட்டலாம் 3டி ஓவியம்!
PUBLISHED ON : ஏப் 02, 2018

அ நிறம் | அளவு
காற்றில் படம் வரைய உதவும் செயலி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜி.பி.எஸ். வசதியின் துணைகொண்டு, காற்றில் படம் வரையலாம். இந்தச் செயலியின் பெயர் ஆர்டோப்பியா (Augmented reality app). குவைத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒமர் கலீல், இந்தச் செயலியை வடிவமைத்துள்ளார். இந்தச் செயலிக்குள் சென்று கேமராவை ஆன் செய்ய வேண்டும். பின்னர், அதன்வழியே தெரியும் இடத்தில், நமக்கு விருப்பமான படத்தை, போன் திரையில் வரையலாம். படத்தை முப்பரிமாணமாக வரைந்து முடித்ததும், அதைச் சேமித்துக்கொள்ளும் வசதி உள்ளது. நம் படத்தை நண்பர்களுடன் பகிரலாம். அவர்கள் படம் வரையப்பட்ட இடத்துக்கு வந்து, ஆர்டோப்பியா செயலியை இயக்கினால் நாம் வரைந்த படத்தை அவர் முப்பரிமாணத்தில் பார்த்துக்கொள்ளலாம்.


