உள்ளடக்கத்திற்கு செல்ல
நொடியில் 5 லட்சம் கோடி புகைப்படம் அதிவேக கேமரா உருவாக்கம்
நொடியில் 5 லட்சம் கோடி புகைப்படம் அதிவேக கேமரா உருவாக்கம்
PUBLISHED ON : மே 15, 2017
அ நிறம் | அளவு
ஒரு நொடிக்கு, 5 லட்சம் கோடி புகைப்படங்களை எடுக்கும் உலகின் அதிவேக கேமராவை, ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த கேமரா மூலம், வேதியியல் வினைகள், மூலக்கூறு செயற்பாடுகள், ஒளி ஊடுருவல், விலங்கின் மூளை செயற்பாடுகள் என்று பலவற்றையும் நுணுக்கமாகப் படமெடுக்க முடியும். அதாவது, இதுவரை வீடியோ பதிவு செய்ய சாத்தியமற்றது என்று கருதப்பட்டு வந்த பலவற்றையும், இனி வீடியோ எடுக்க முடியும். இக்கேமரா மரபு தொழில்நுட்பத்தின்படி அல்லாமல், புதிய அல்காரித தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர், கேமராவின் அதிகபட்ச திறன், நொடிக்கு ஒரு லட்சம் புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
