உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 11, 2019

அ நிறம் | அளவு
பொதுவாக இந்தியா ஏழை நாடு என்று பலரும் சொல்லி வருவதைப் பார்த்திருப்போம். இன்று நிலைமை மாறிவருகிறது. நம் நாட்டில் உள்ள மக்கள்தொகை 130 கோடி. இதில் வரி செலுத்துவோரில் 61 பேர், தங்களிடம் 100 கோடி ரூபாய்க்குமேல் சொத்துகள் உள்ளதாக வருமான வரித் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.
இத்தகவலை, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மக்களவையில் தெரிவித்துள்ளார். கடந்த, 2014 - 15 வரி மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்தோரில், 24 பேர் மட்டுமே தங்களிடம், 100 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளதாகக் கணக்கு காட்டியுள்ளனர். இது, 2015 - 16இல், 38 ஆகவும், 2017 - 18இல், 61 ஆகவும் அதிகரித்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
