தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஒரு நாள் பிரதமராக 5 வயது சிறுமி!

ஒரு நாள் பிரதமராக 5 வயது சிறுமி!

ஒரு நாள் பிரதமராக 5 வயது சிறுமி!


PUBLISHED ON : ஜூன் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கனடாவின் தேசிய தினத்தை ஒட்டி, குழந்தைகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெறும் குழந்தைகள், கனடாவின் ஒருநாள் பிரதமர் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இப்போட்டியில், பெல்லா மூஸ் என்ற 5 வயது சிறுமி வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் இருக்கையில் அமரவைத்து, பெல்லா மூஸுடன் உரையாடினார். ஒரு நாள் பிரதமராக மாறிய சிறுமி பெல்லா மூஸ், தனக்கென்று ஓர் அரண்மனையை கட்டுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து, தலையணைகள், நாற்காலிகள், மேஜை மற்றும் பல வண்ண ஓவியங்கள் கொண்ட போர்வை ஆகியவற்றை பயன்படுத்தி, பொம்மை அரண்மனையை கட்டினார் பிரதமர் ஜஸ்டின். பின்னர், அந்த அழகிய அரண்மனையை, ஒருநாள் பிரதமரான பெல்லா மூஸிடம் அவர் வழங்கினார். இச்சம்பவம், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us