உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 13, 2016

அ நிறம் | அளவு
சூரியனின் மேற்பரப்பில் இரண்டு பெரிய 'கருங்குழி'கள் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருங்குழிகளில் இருந்து சூரியத் துகள்கள் நிரம்பிய அதிவேகக் காற்று உற்பத்தியாவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தக் காற்றின் வேகம் சூரியனின் மற்ற பகுதிகளில் வீசும் காற்றைவிட மூன்று மடங்கு வேகம் மிக்கதாக இருக்கும். சூரியப் புயல்கள் சூரிய மண்டலத்தில் புவி காந்தப் புல மாற்றங்களை உருவாக்கும். இதனால் பூமியின் தகவல் தொடர்பு அமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கருங்குழிகள் உள்ள பகுதிகளில் சூரியனின் மற்ற பகுதிகளைவிட வெப்பம் குறைவாகவும் அடர்த்தி குறைவாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
