PUBLISHED ON : மே 30, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாராஷ்டிரா: அகோலா மாவட்டம், சாங்கி துர்க்வாடா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சஞ்சய். இவரது நிலத்தின் அருகே செல்லும் கால்வாயில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. இதனால் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர் அடித்து செல்லப்பட்டு சஞ்சய்க்குப் பெருத்த நஷ்டம் ஏற்படுவது வழக்கம். எனவே, அப்பகுதியில் அணை கட்ட உதவும்படி அரசுக்கு சஞ்சய் கோரிக்கை விடுத்தார். அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் சஞ்சய் தனக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில், 10 ஏக்கர் நிலத்தை ரூ. 55 லட்சத்திற்கு விற்பனை செய்து அணையைக் கட்டத் தொடங்கியுள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் பணி இன்னும் இரு வாரங்களில் முடிவடைய உள்ளது. இந்தப் பகுதி விவசாயிகளும் இணைந்து அணையைக் கட்ட உதவிவருகின்றனர்.
இதுதான் நமக்கு நாமே திட்டமோ...

