sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

யூ ட்யூபை கலக்கும் கொள்ளுப் பாட்டி

/

யூ ட்யூபை கலக்கும் கொள்ளுப் பாட்டி

யூ ட்யூபை கலக்கும் கொள்ளுப் பாட்டி

யூ ட்யூபை கலக்கும் கொள்ளுப் பாட்டி


PUBLISHED ON : ஜூலை 24, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 24, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஸ்தனம்மா (Karre Mastanamma) என்ற 106 வயது பாட்டியின் வீடியோக்கள் யூ ட்யூப் இணையதளத்தில் மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். ஆந்திர மாநிலம் கொபல்லே கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தானம்மா. வாழ்வில் அடுக்கடுக்காக தனக்கு நேர்ந்த துயரங்களை அலட்சியப்படுத்தியபடி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவரது கொள்ளுப்பேரன் லக்ஷ்மண் தனது நண்பர் ஸ்ரீகாந்துடன் சேர்ந்து, தனியாக வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களுக்கான எளிய சமையல் குறிப்புகளை வலையேற்றும் ஒரு சேனலைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் அவர்களது வீடியோக்களுக்கு அதிக வரவேற்பில்லை. ஒரு முறை லக்ஷ்மணனின் அம்மா தனது பாட்டியின் சமையல் திறனைப் பற்றி புகழ, இரண்டு இளைஞர்களும் அவரைக் காண கிராமத்துக்கு புறப்பட்டார்கள். பாட்டியின் முதல் சமையல் குறிப்பான கத்திரிக்காய் மசாலா வலையேற்றப்பட்டதுமே சேனலைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டது.

மஸ்தனம்மா வயல்வெளியில் அமர்ந்தபடி, பாரம்பரிய உணவு வகைகளை எளிமையான முறையில் சமைத்து, அதை தன்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளுக்கு ஊட்டும் காட்சி உலகெங்கும் பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது. தர்பூசணியின் ஓட்டில் கோழி இறைச்சியை சமைக்கும் அவரது வீடியோ மட்டும் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இன்றைக்கு மஸ்தனம்மாதான் யூட்டியூப்பில் ஹிட் பாட்டி!






      Dinamalar
      Follow us