PUBLISHED ON : ஜூலை 22, 2024

உங்களுடைய துணிச்சல் அல்லது நாட்டுப் பற்றின் மீது எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால். உங்களுடைய பல செயல்கள் மனித குலத்துக்குத் துன்பத்தைக் கொண்டு வருகின்றன என்பதிலும் ஐயம் இல்லை.
நாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்கிறோம். ஆனால், பிரிட்டிஷ் மக்களுக்கு எந்தத் துன்பத்தையும் தர விரும்பவில்லை. அவர்களை நாங்கள் போர்க்களத்தில் வெல்ல விரும்பவில்லை.
ஆயுதம் இல்லாமல் அவர்கள் மனத்தை மாற்ற விரும்புகிறோம். வன்முறையற்ற போராட்டத்தால் உலகின் மிக வன்முறையான படையைக்கூட வென்றுவிடலாம் என்பது எங்கள் நம்பிக்கை.
நீங்கள் அழிவு அறிவியலைப் பின்பற்றுகிறீர்கள். ஆனால், பிரிட்டனோ இன்னொரு நாடோ அதே முறையைப் பின்பற்றி உங்களை வென்று விடக்கூடும் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? மனித குலத்தின் நன்மைக்காக இந்தப் போரை நிறுத்துங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இது இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் மகாத்மா காந்தி அடிகள் ஒரு தலைவருக்கு எழுதிய கடிதத்தின் சாரம். இந்தக் கடிதம் அந்தத் தலைவருக்குப் போய்ச் சேரவில்லை. போர் நடந்தேறியது.
காந்தியடிகள் இந்தக் கடிதத்தை எந்தத் தலைவருக்கு எழுதினார்?
விடைகள்: கடிதம் எழுதப்பட்டது, ஹிட்லருக்கு.