PUBLISHED ON : ஏப் 23, 2018
சிறு வயதினருக்கு அளிக்க வேண்டிய மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று புத்தகங்கள். வாசிப்பை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் வாழ்வின் எல்லா அறிவையும் பெற்றுக்கொள்வதற்கான வாசலைத் திறந்து வைக்கிறோம். 'உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி.
புத்தக வாசிப்பு எல்லா நாட்களிலும் செய்யலாம். ஆனால், புத்தகங்களைக் கொண்டாடுவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒரு தினம்தான் 'உலக புத்தக தினம்'. புகழ்பெற்ற எழுத்தாளரான வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினமான ஏப்ரல் 23 உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. 'உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம்' (World Book and Copyright Day), யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் அறிவிக்கப்பட்டு 1995ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தில் உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், நூலகங்கள் என பலரும் இதில் பங்கேற்கின்றனர். புத்தகங்கள் வாங்கியும், பரிமாறிக்கொண்டும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் இந்த தினத்தில் நீங்களும் பங்கேற்று வாழ்க்கையைக் கொண்டாடுங்கள் புத்தகங்களுடன்!
ஏப்ரல் 23 உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, தமிழகத்திலும் கண்காட்சி, நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சென்னை புத்தகச் சங்கமம் கண்காட்சி
அனுமதி இலவசம்!
ஏப்ரல் 20 - 25
காலை 11 - 9 மணி வரை
இடம்: பெரியார் திடல்,
வேப்பேரி, சென்னை.
50% தள்ளுபடி
புக்ஸ் ஃபார் சில்ரன்
பாரதி புத்தகாலயம்,
தேனாம்பேட்டை சென்னை-18.
ஏப்ரல் 21-24 வரை,
50% தள்ளுபடி
சில்ரன்ஸ் புக் டிரஸ்ட்,
18-பி, ரயாலா டவர்ஸ்,
781, அண்ணா சாலை,
சென்னை - 2.
போன்: 044 - 2852 1850
எதிர் வெளியீடு
பொள்ளாச்சி - 642002.
போன்: 04259 - 226012
30-50% தள்ளுபடி
இணைய தளங்கள்:
discoverybookpalace.com
commonfolks.in
30% தள்ளுபடி