தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உயிர் காக்கும் தானம்!

உயிர் காக்கும் தானம்!

உயிர் காக்கும் தானம்!


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக ரத்த தான தினம் ஜூன் 14

ஒருவர் தனது ரத்தத்தை பிறருக்கு வழங்கி உதவுவது ரத்த தானம்.

நோய் பாதிப்பு, அறுவைச் சிகிச்சை, விபத்து, உயிருக்கு ஆபத்தான நிலை போன்ற காரணங்களால் ரத்தம் தேவைப்படுகிறது.

ரத்த வகைகளைக் கண்டுபிடித்த கார்ல் லேண்ட்ஸ்டேய்னர் (Karl Landsteiner) பிறந்த தினம்தான் உலக ரத்த தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

1% உலக மக்கள் தொகையில் ரத்த தானம் செய்கிறவர்களின் சதவிகிதம்

ரத்த தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ரத்த தானம் செய்கிறவர்களை கௌரவப்படுத்துவது போன்ற காரணங்

களுக்காக உலக ரத்த தான தினம் உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது.

ரத்தத்தைத் தானமாகப் பெறுகிறவரின் உயிரைக் காக்கிறது. அது மட்டுமல்ல; ரத்த தானம் செய்பவர்களின் உடலில் புதிய ரத்தம் உற்பத்தி ஆவதால் அதன் மூலம் ரத்த தானம் செய்கிறவரும் பலன் அடைகிறார்.

5 - 6 லிட்டர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு

தொழில்நுட்ப வளர்ச்சிகள் பல ஏற்பட்டிருந்தாலும் ரத்தத்துக்கு மாற்றாக இன்னும் எதுவும் கண்டறியப்படவில்லை.

2வாரம் தானமாகக் கொடுக்கப்பட்ட ரத்தத்தின் அளவு மீண்டும் நம் உடலில் உற்பத்தியாகத் தேவையான கால அளவு. நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

300 - 350 மி.லி. (ஒரு யூனிட்) ஒரு மனிதரிடமிருந்து தானமாகப் பெறப்படும் ரத்தத்தின் அளவு

3மாதம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எந்தவித பாதிப்பும் இன்றி ரத்த தானம் செய்யலாம்.

5 - 10 நிமிடம் ரத்த தானம் அளிக்கத் தேவைப்படும் நேரம்

18 - 70 வயது வரை உள்ள ஆரோக்கியமான மனிதர்கள் ரத்த தானம் செய்யலாம்.

தானமாக அளித்த ரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். ரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.

உலக ரத்த தான தினத்தின் குறிக்கோள்

* ரத்த தானம் வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்

* உயிர் காக்கிற விலை மதிப்பற்ற வளத்தை வழங்குபவர் என்ற கௌரவத்தை அளித்தல்.

* ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

* ரத்த தானத்தின் அவசியத்தைச் சொல்லி ரத்த தானம் செய்ய ஊக்குவித்தல்.

ரத்த தானம் அளிக்க: எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடுகளும் தேவையில்லை. ரத்த தானம் அளித்த பிறகு அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம்.

ரத்த தானம் என்பது ஓர் உயிரைக் காக்க நாம் செய்யும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக நமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

187 முறை ரத்த தானம்: சென்னையைச் சேர்ந்த பி-.ஏ.கே.பி.ராஜ்சேகரன் என்பவர் 187 முறை தானம் செய்து சாதனை செய்திருக்கிறார் கடந்த 43 வருடங்களாகத் தொடர்ந்து ரத்த தானம் செய்து வரும் இவர் ரத்த தான முகாம்களையும் நடத்தி வருகிறார். ரத்த தானம் செய்கிற 8000 பேர்களின் பட்டியலையும், தொடர்பு எண்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். சென்னையில் வசிப்போருக்கு ரத்த தானம் தேவைப்பட்டால் இவரைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு எண்கள். 044 - 2595 4253, 94443 31407, 73584 04734

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us