sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/காடுகளின் துப்புரவாளர்

காடுகளின் துப்புரவாளர்

காடுகளின் துப்புரவாளர்


PUBLISHED ON : அக் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெண் முதுகு வல்லூறு (White backed Vulture - ஒயிட் பேக்டு வல்ச்சர்)

'ஆக்சிபிட்ரிடே' (Accipitridae) என்ற பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. வெண் முதுகு வல்லூறின் எடை 3.5 கிலோ முதல் 7.5 கிலோ வரை இருக்கும். நீளம் 75 முதல் 93 செ.மீ. வரை கொண்டது. விரிந்த நிலையில் இதன் இறக்கை 1.92 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை காணப்படும்.

* உயரமான மரங்களில் இவை கூடுகளை அமைக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

* வனப்பகுதிகளில் உள்ள இறந்த விலங்கினங்களின் சடலங்களை (Carcasses-- கார்காஸ்ஸஸ்) தின்று வாழ்வதால், இவை காடுகளைச் சுத்தப்படுத்தி உதவுகின்றன. இதனால், வல்லூறுகளுக்கு, 'காடுகளின் துப்புரவாளர்கள்' என்ற பெயர் உண்டு.

* தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியாவில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்ட இந்த வல்லூறு இனம், தற்போது மிக அருகி வரும் இனங்களின் பட்டியலில் (Critically Endangered Species - கிரிட்டிகலி என்டேஞ்சர்டு ஸ்பீசிஸ்) இடம்பெற்றுள்ளது.

* கால்நடைகளுக்கு வலிநிவாரணியாக அளிக்கப்படும் 'டைக்ளோஃபினாக்' (Diclofenac) என்ற மருந்தை உட்கொண்ட விலங்குகளின் உடலை உண்பதால், இந்த வல்லூறுகள் இறக்கின்றன.

இந்தியாவில் காணப்படும் வல்லூறுகள்

வெண் முதுகு வல்லூறு (White- backed Vulture - ஒயிட் பேக்டு வல்ச்சர்)

வெண் பிட்ட வல்லூறு (White- rumped Vulture - ஒயிட் ரம்ப்டு வல்ச்சர்)

ஹிமாலயன் வல்லூறு (Himalayan Vulture - ஹிமாலயன் வல்ச்சர்)

ரப்பல் வல்லூறு (Ruppel Vulture - ரப்பல் வல்ச்சர்)

கிரிஃபான் வல்லூறு (Griffon Vulture - கிரிஃபான் வல்ச்சர்)

இந்திய வல்லூறு (Indian Vulture - இந்தியன் வல்ச்சர்)

மெல்லழகு வல்லூறு (Slender-billed Vulture - ஸ்லென்டர் பில்டு வல்ச்சர்)

கேப் வல்லூறு (Cape Vulture - கேப் வல்ச்சர்)

திணை (Kingdom - கிங்டம்) - விலங்கு (Animalia - அனிமலியா)

தொகுதி (Phylum - பைலம்) - முதுகுநாணி (Chordata - கோர்டேட்டா)

வகுப்பு (Class - கிளாஸ்) - பறவை (Aves - ஏவ்ஸ்)

வரிசை (Order - ஆர்டர்) - அசிப்பிட்ரிஃபோர்ம்ஸ் (Accipitriformes)

குடும்பம் (Family - ஃபேமிலி) - ஆக்சிபிட்டிரிடே (Accipitridae)

பேரினம் (Genes - ஜீனஸ்) - ஜிப்ஸ் (Gyps)

இனம் (Species - ஸ்பீசிஸ்) - ஜி. பெங்கலின்சிஸ் (G. Bengalensis)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us