PUBLISHED ON : மே 28, 2018

அ நிறம் | அளவு
இன்றைய சூழலில், அசல் மற்றும் போலிப் பொருட்கள் இடையேயான வித்தியாசத்தைக் கண்டறிவதில் பெரும் சவால் உள்ளது. சில சமயங்களில், போலிப்பொருட்கள் அசலைவிட நன்றாகத் தோற்றம் அளிக்கின்றன. குறிப்பாக போன்கள், மொபைல் சார்ஜர் போன்றவற்றில் போலிகள் அதிகம். இந்தச் சிக்கலுக்கு முடிவு கட்டும் வகையில், ஐ.பி.எம். மென்பொருள் நிறுவனம் புதிய கருவி ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த ஸ்மார்ட் ஸ்கேனர் கருவியை, ஸ்மார்ட்போன் கேமராவில் பொருத்தி, சந்தேகிக்கும் பொருளைப் புகைப்படம் எடுத்தால் போதும். அது, அசலா போலியா என்பதைச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் காட்டிக்கொடுத்துவிடும். வைரம், மருந்துகள், காலணிகள், உடைகள், எலக்ட்ரானிக் உபகரணங்கள் என்று ஏராளமான பொருட்களை இதில் சரிபார்க்கலாம்.
