தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'கணக்கு' வந்த கதை!

'கணக்கு' வந்த கதை!

'கணக்கு' வந்த கதை!


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதிய உணவு இடை வேளையில் மாணவர்கள், வகுப்பில் ஒரு விநோதமான விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார்கள். மேசையில் இருந்த ஒரு குடுவையில், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் பெயர்களும் சிறு சிறு சீட்டுகளில் எழுதப்பட்டுப் போடப்பட்டிருந்தன. ஒரு மாணவன் அந்தக் குடுவையில் இருக்கும் சீட்டுகளில் ஒன்றை எடுத்து அதில் எழுதியிருக்கும் பெயருக்கு அனைத்து மாணவர்களின் முன்னிலையில் அர்த்தம் கூறவேண்டும். இதுதான், அந்த விளையாட்டு!

நானும் அந்த விளையாட்டில் கலந்துகொள்ள விரும்பி வகுப்பிற்குள்ளே சென்றேன். மாணவர்கள் என்னையும் ஒரு பெயர் எழுதிக் குடுவையினுள் போடச் சொன்னார்கள். நானும் எழுதி அதனுள் போட்டேன். விளையாடிக்கொண்டு இருக்கும்போது, நான் எழுதிய சீட்டை ஒரு மாணவன் தேர்ந்தெடுக்க நேர்ந்தது. ஆவலுடன் பிரித்துப் பார்த்த அவன் அதிர்ச்சியானான். அதற்குக் காரணம் அதில் அவன் படித்த பெயர் 'Mathematics' என்பதே!

'Mathematics' எனும் வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியாது எனக் கூறினான். மற்ற மாணவர்கள் 'எங்களுக்கும் இதற்கான அர்த்தம் தெரியாது, நீங்களே கூறி விடுங்கள்' எனக் கேட்டார்கள். 'சரி! இதன் அர்த்தத்தை நானே சொல்கிறேன்' என்று சொல்ல ஆரம்பித்தேன்.

உங்கள் அனைவருக்கும் 'பிதாகரஸ்' எனும் கணித மேதையைத் தெரியும்தானே? அவரது சீடர்களின் ஒரு பிரிவினர் 'Mathematikoi' என அழைக்கப்படுவார்கள். இதற்கு, 'அனைத்தையும் படித்தறிதல்' என்று அர்த்தம். மேலும், 'Mathema' என்ற சொல் 'பொதுவாகப் படித்து அறிதல்' எனப் பொருள்படும். இதுவே, Mathematics என்ற சொல்லிற்கு உள்ளர்த்தமாக அமைகிறது என விளக்கமளித்து விளையாட்டை நிறைவு செய்தோம்.

இரா. செங்கோதை

கணித ஆசிரியை, 'பை' கணித மன்றம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us