PUBLISHED ON : ஜூலை 24, 2023

ஒரு பயணி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ராயப்பேட்டை வரை செல்ல மாநகர பேருந்தில் ஏறினார். சாதாரண கட்டண பேருந்தா அல்லது டீலக்ஸ் பேருந்தா என்று அவர் கவனிக்கவில்லை.
டிக்கெட் எடுக்க, நடத்துனருக்குச் சரியான சில்லறை கொடுக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.
அவரிடம் ஏழு (5+2) ரூபாய் சில்லறை இல்லாததால், ஏழு ரூபாய் டிக்கெட்டுக்கு நடத்துனரிடம் பன்னிரெண்டு ரூபாய் (10+2) கொடுத்தார். இப்போது, நடத்துனர் மீதி 5 ரூபாய் நாணயத்தைத் தரலாம் அல்லவா?
அப்படி நடக்கவில்லை. “இது 'டீலக்ஸ்' பேருந்து” என்றார் நடத்துனர். உடனே, 10 ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்தார் பயணி. நடத்துனரோ, மீதி 7 ரூபாய் தருவார் என்று நினைத்தார்.
ஆனால், வெறும் ரூ.2 கொடுத்தார்.
“சார்! இன்னும் ரூ.5 தரணும்?” என்று பயணி கேட்டு வாங்கினார்.
எனில், சென்ட்ரலுக்கும் ராயப்பேட்டைக்குமான டிக்கெட் விலை என்ன?
விடை: 15 ரூபாய்
விளக்கம்:
பயணி கொடுத்த மொத்த பணம் = 12 + 10 = 22 ரூபாய்.
நடத்துனர் முதலில் கொடுத்த மீதிப் பணம் = 2 ரூபாய்.
நடத்துனரிடம் கேட்டு வாங்கிய பணம் = 5 ரூபாய். ஆக, 5 + 2 = 7 ரூபாய்.
எனவே, டிக்கெட்டின் விலை = 22 - 7 = 15 ரூபாய்.
