PUBLISHED ON : அக் 09, 2023
ஒரு நான்கு இலக்க எண். அதை ABCD என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இங்கு, ABCD நான்கால் வகுபடும்.
AB என்பது 5ஆல் வகுபடும்.
BC என்பது 9ஆல் வகுபடும்.
A+B+C+D என கூட்டினால் 25 கிடைக்கும்.
எனில், ABCDயின் மதிப்பு என்ன?
குறிப்பு: A,B,C,D ஆகியவை பூஜ்ஜியமாக இருக்காது.
விடை : 8548
எப்படியென்றால், ABCD என்ற நான்கு இலக்கங்களில், முதல் இரு இலக்கங்களான AB என்பது 5ஆல் வகுபடும் என்பதால், B என்பது 0 அல்லது 5ஆக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பின்படி, Bஇன் மதிப்பு 0 என வராது. ஆக, B=5.
Bஇன் மதிப்பு 5ஆக இருப்பதால், 9ஆல் வகுபடும் BCஇன் மதிப்பு 54ஆக இருக்கும் தானே! ஆகையால், C=4.
A+B+C+D = 25 என்று நாம் அறிவோம். இதில்,
B=5 மற்றும் C = 4 ஆகியவற்றைப் பிரதியிட்டால்,
A+5+4+D = 25
A+9+D= 25
A+D = 25-9
A+D = 16 கிடைக்கும்.
D ஒற்றைப்படை எண்ணாக இருக்குமானால், அது நான்கால் வகுபடாது. எனவே, A மற்றும் Dஇன் கூட்டுத்தொகை 16ஆக இருப்பதால், இரு எண்களின் மதிப்பும் நிச்சயம் 8ஆகத்தான் இருக்கும்.
எனவே, ABCD = 8548.
