PUBLISHED ON : ஜூன் 13, 2016

அ நிறம் | அளவு
இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் ஆண்டுக்கு 30 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியர்கள் அதிகமாக மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். மின்னணுக் கழிவுகளில், 1.5 சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்குப் போகிறது. மீதமுள்ளவை பழைய இரும்பு கடைகளில் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் ஈயம், பாதரசம், கேட்மியம் போன்றவை அதிகமாக இருப்பதால், நீர்மட்டமும் மண் வளமும் பாதிக்கப்பட்டு, காற்றில் மாசு அதிகரிக்கிறது.
