PUBLISHED ON : ஜன 09, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அணு ஆயுதங்களை சுமந்து சென்று, 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-4 ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதுகுறித்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) அதிகாரிகள் கூறும்போது, 'கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன்கொண்ட அக்னி-4 ஏவுகணை, ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் உள்ள சோதனைத் தளத்தில் கடந்த திங்கட்கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அக்னி-4 ஏவுகணை திட்டமிட்டபடி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, 6-வது முறையாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. அக்னி-4 ஏவுகணையின் வெற்றி, இந்திய ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது' என்றனர்.

