உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 17, 2017

அ நிறம் | அளவு
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் பகுதியில் அமைந்துள்ள நேரு வனவிலங்கு பூங்காவில், விலங்குகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, ஏர்கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வனவிலங்கு பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'இங்கு, 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. அனல் காற்றைச் சமாளிக்க முடியாமல் விலங்குகள் திணறுகின்றன. அவற்றுக்கு உதவும் வகையில், ஏராளமான ஏர்கூலர்களைப் பொருத்தி உள்ளோம்' என்றார்.
