PUBLISHED ON : நவ 20, 2017

கந்தக டை - ஆக்ஸைடு; சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கக்கூடிய வாயு. காற்றில் இதைக் கலக்கச்செய்வதில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியாகி உள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த சீனா, தற்போது கந்தக டை - ஆக்ஸைடு காற்றில் கலப்பதை 75 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளது. அதேநேரம் இந்தியா வெளியேற்றும் கந்தக டை - ஆக்ஸைடு அளவை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த வாயுவின் நச்சுத்தன்மை காரணமாக, இந்தியாவிலும் சீனாவிலும் பொதுமக்களின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைவதாகவும், ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 3 கோடியே 30 லட்சம் பேரும், சீனாவில் சுமார் 9 கோடியே
90 லட்சம் பேரும் கந்தக டை - ஆக்ஸைடு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.
