PUBLISHED ON : ஏப் 28, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கை என்ற எழுத்தில் முடியும் சொற்கள் தமிழில் எண்ணற்றவை. ஈவது ஈகை. வெற்றி மலர் வாகை. வாழ்வது வாழ்க்கை. எதிரியை உருவாக்குவது பகை. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
கீழேயுள்ள குறிப்புக்கேற்ப 'கை' என்று முடியும் சொற்களை எழுத வேண்டும்.
அ. மூவகை இடங்களில் தொலைவிலுள்ள இடத்தைக் குறிப்பது___________
ஆ. காலத்தைக் குறிக்கும் அளவு___________
இ. மெலிதாய்ச் சிரிப்பது___________
ஈ. மலர்களில் ஒன்று___________
உ. மரத்தை அறுத்துப் பெறுவது___________
ஊ. பாண்டியர் துறைமுகம் ___________
எ. மயிலுக்கு அழகு___________
ஏ. உடலுக்கு இன்னொரு சொல்___________
ஐ. பிச்சை புகினும் ___________ நன்றே.
- மகுடேசுவரன்
விடைகள்:
அ. படர்க்கை
ஆ. நாழிகை
இ. புன்னகை
ஈ. மல்லிகை
உ. பலகை
ஊ. கொற்கை
எ. தோகை
ஏ. யாக்கை
ஐ. கற்கை