PUBLISHED ON : ஏப் 29, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெர்மனியில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண் ஒருவர் கோமாவிலிருந்து மீண்ட ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஓமரின் தாயார் முனிரா, கடந்த 1991இல் விபத்துக்குள்ளானார். இதில், கோமாவுக்குச் சென்றவர், 27 ஆண்டுகள் செயலற்றுக் கிடந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென சுயநினைவு திரும்பியது. உடனே அவரது மகன் பெயரைச் சத்தமாகக் கூறி அழைத்தார். ”என் பெயரைக் கூறி அழைத்தபோது, ஆகாயத்தில் பறப்பதாக உணர்ந்தேன்'' என்றார் ஓமர்.

