
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியும், முடிவுகள் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27இல் தொடங்கி, ஏப்ரல் 13இல் முடிவடைகிறது. தேர்வு முடிவு மே 4ஆம் தேதி வெளியிடப்படும். பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4இல் தொடங்கி, மார்ச் 26இல் நிறைவடையும். முடிவு மே 14ஆம் தேதி வெளியிடப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2இல் தொடங்கி, மார்ச் 24இல் நிறைவடையும். தேர்வு முடிவு ஏப்ரல் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

