தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பழமையான நறுமணப் பொருள்

பழமையான நறுமணப் பொருள்

பழமையான நறுமணப் பொருள்


PUBLISHED ON : ஜூன் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதன் பயன்படுத்த ஆரம்பித்த நறுமணப் பொருட்களிலேயே மிகப் பழமையானது 'லவங்கப்பட்டை.'

சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லவங்கப்பட்டை உலகம் முழுக்கவே வியாபாரம் ஆகி வந்துள்ளது. குறிப்பாக, முதலாம் நூற்றாண்டில் இந்தோனேசிய வணிகர்கள் லவங்கப்பட்டையை மடகாஸ்கருக்கும், ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கும் கொண்டுபோய் வியாபாரம் செய்தார்கள்.

அக்கால மனிதர்கள் செய்த வணிகம் பற்றி, ரோமன் நாட்டைச் சேர்ந்த பிளைனி என்கிற வரலாற்று ஆசிரியர் தனது நூல் ஒன்றில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“பண்டைய கால மனிதர்கள் நறுமணப் பொருட்களை கடல் வழியாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்றார்கள். அதுவும் எப்படி? பெருங்கடலில் கட்டுமரத்தோணி மூலமாக அவர்கள் பொருட்களைச் சுமந்து சென்றார்கள். எகிப்தியர்கள் காலத்தில் லவங்கப்பட்டை ஒரு முக்கியமான நறுமணப் பொருள். மனிதர்களின் உடலைப் பதப்படுத்த உதவும் கலவையில் லவங்கப்பட்டை ஒரு முக்கியமான பொருள். அதுமட்டுமல்ல; யூதர்கள் லவங்கப்பட்டையை இறைவனுக்கான பொருளாகவும் படைத்திருக்கிறார்கள்.

- கொக்கோ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us