உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 27, 2018

அ நிறம் | அளவு
கேட்கும் திறன் குறைபாடு கொண்ட, வாடகைக் கார் ஓட்டுநர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண, செயலி (App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயக்டஸ் (Coactus) எனும் தென் கொரிய நிறுவனம், அந்நாட்டின் தலைநகரான சியோலில் இச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மென்பொருள், பேச்சை எழுத்தாக மாற்றும் (voice- to- text conversion) திறன் கொண்டது. வாடிக்கையாளர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடம், கட்டணம் செலுத்தும் முறை போன்றவற்றை உச்சரித்தால், இந்நிரலி அவற்றை எழுத்துகளாக மாற்றி ஓட்டுநரின் திரையில் காண்பித்துவிடும்.
இந்நிரலிக்கு கோயோஹன் (Goyohan) அல்லது சைலன்ட் டாக்ஸி (Silent Taxi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் செயலி, செவித்திறன் குறைபாடுடைய ஓட்டுநர்களுக்கு மிக உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
