உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 19, 2018

அ நிறம் | அளவு
ஃபேஸ்புக்கின் நிறுவனரான மார்க் சூக்கர்பெர்க், தன் நிறுவனத்தின் மீதான விமரிசனங்களை ஏற்றுக் கொள்ளாமல், தனிப்பட்ட விரோதம் பாராட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் டிம் குக், ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சரியாகப் பாதுகாக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இதனால் கோபமடைந்த மார்க், தன் நிறுவன உயர் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கட்டுப்பாடு விதித்ததாகத் தெரியவந்துள்ளது.
மேலும், ஆப்பிள் நிறுவனம் பற்றிய அவதூறுகளைப் பரப்புவதற்காக, ஒரு தனியார் நிறுவனத்தை அவர் அணுகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விரு தலைமை நிர்வாகிகளின் மோதல், கார்ப்பரேட் யுத்தமாக உருவெடுத்து வருகிறது.
