உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 08, 2016

அ நிறம் | அளவு
பிப். 4 - இந்திய துணை ராணுவப் படையின் தலைவராக, அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்றார். தேசிய குற்றப் பதிவுகள் வாரியத் தலைவராகப் பணியாற்றி வந்த அர்ச்சனா ராமசுந்தரம், துணை ராணுவப் படையின் 60 ஆண்டு வரலாற்றில், முதன் முதலாக நியமிக்கப்பட்ட, பெண் தலைவர் என்கிற சிறப்பைப் பெற்றுள்ளார். டில்லியில், துணை ராணுவப் படை தலைமையகத்தில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அர்ச்சனா ராமசுந்தரம், ''இது என் வாழ்வில் என்றும் நினைவில் இருக்கும் நன்னாள். இந்தப் பெருமையை, இந்தியப் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்'' என்றார். அர்ச்சனா ராமசுந்தரம், தமிழக காவல் துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.
