தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முயற்சிகள் தவறலாம்... முயற்சிக்கத் தவறலாமா!

முயற்சிகள் தவறலாம்... முயற்சிக்கத் தவறலாமா!

முயற்சிகள் தவறலாம்... முயற்சிக்கத் தவறலாமா!


PUBLISHED ON : மார் 19, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முயற்சியின் இரு வேறு பக்கங்கள்தான் வெற்றியும் தோல்வியும்! தோல்வியைக் கண்டு பயந்து முயற்சியைக் கைவிடக்கூடாது. ஒரு முயற்சியில் ஏற்படும் தோல்விக்குப் பிறகு அந்த முயற்சியை எட்டுவதில் நாம் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் முயற்சித்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த பண்பு அவசியம் தேவை. 'தோல்வியைக் கண்டு துவளலாமா?' என்ற தலைப்பில் சென்னை, குன்றத்தூர், சிவந்தி பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள், எழுத்தாளர் ஹாலாஸ்யன் அவர்களுடன் உரையாடினார்கள்.

ஹாலாஸ்யன்

பொதுவா வெற்றி, தோல்வின்ற விஷயத்தை நாம பெருசா எடுத்துக்கறோம். எந்த ஒரு விஷயத்திலயும் முதல் முயற்சியில எல்லோருக்கும் வெற்றி கிடைச்சுடறதில்ல. புதிய கண்டுபிடிப்புகள் பத்தி நீங்க படிச்சிருப்பீங்க. எல்லா கண்டுபிடிப்புகளுமே பல்வேறு தோல்விகளுக்குப் பிறகு சாத்தியப்பட்டவைதான். அதனால, வெற்றி, தோல்வி இது ரெண்டையும் நாம சரியா ஏத்துக்கப் பழகணும். முயற்சிகளில் ஏற்படற வெற்றி, தோல்வி பத்திய உங்க கருத்துகளைச் சொல்லுங்க.

ஜா.வின்சி

தோல்வி ஏற்பட்டா முதல்ல வருத்தமும், தாழ்வுணர்ச்சியும் ஏற்படுது. இந்த எண்ணத்தை மாத்திக்கணும். இப்ப தோத்துட்டா என்ன அடுத்த முறை அதிக முயற்சி பண்ணி வெற்றி பெறணும்னு நினைக்கணும். தோல்விதான் வெற்றிக்கான முதல் படி.

நா.அமிர்தவர்ஷினி

எந்த விஷயத்திலயும் வெற்றியடைஞ்சுட்டே இருந்தா ஒரு கட்டத்துல நமக்கு ஓவர் கான்பிடன்ஸ் வந்துடுது. அதனால நாம பல தவறுகளைச் செய்துடுவோம். தோல்வி நிச்சயம் வேணும். அது நம்மை வெற்றி பெற அதிகம் உழைக்கணும்னு உணர்வைத் தருது.

சு.ஸ்ரேயா

தோல்வி நமக்கு பயத்தைத் தருது. அதனால அவமானமா உணர்றோம். ஆனா அதையே நினைச்சிட்டு இருந்தா நாம முன்னேற முடியாது. தோல்வியைக் கண்டுபயப்படாம விடாமுயற்சியோட இருந்தா வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

மு.ரா.ரஞ்சித் ஸ்ரீ குமார்

வாழ்க்கையில தோல்விகள் நிச்சயம் ஏற்படும். வெற்றி பெற்ற பலரது கதைகளைக் கேட்டோம்னா அவங்க எத்தனை தோல்வி, தடைகளைத் தாண்டி அந்த வெற்றியைப் பெற்றிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம். நாம அடையற தோல்விகள்தான் வெற்றியை நோக்கி நம்மை முன்னகர்த்தும்.

வெ.கிர்திக் ஈஸ்வர்

முயற்சியில்லாம எதுவுமே கிடைக்காது. முயற்சி தவறுவதைத்தான் நாம தோல்வின்னு சொல்றோம். முயற்சி செய்து கிடைக்கலன்னா மறுபடி மறுபடி முயற்சி செய்யணும். தன்னம்பிக்கையோட முயற்சி செஞ்சா எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.

மா.வசந்தரூபன்

பெரும்பாலும் ஏதாவது ஒரு விஷயத்துல தோத்துட்டா மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு மட்டுந்தான் யோசிக்கறோம். தோத்துட்டா என்ன நான் அடுத்தமுறை ஜெயிச்சுக் காட்டுவேன்னு போராடி வெற்றி பெறணும். தோல்வியைக் கண்டு சோர்ந்து போயிடக்கூடாது.

ஹாலாஸ்யன்

வெற்றி, தோல்வி பற்றிய சரியான புரிதலோட இருக்கீங்க. நாம செய்யற முயற்சிகள் தவறலாம், தோல்விகள் ஏற்படலாம். ஆனா முயற்சி செய்யறதை நாம கைவிடக்கூடாது. தொடர்ச்சியான ஆய்வுகள்தான் உலகத்துக்குப் புதிய கண்டுபிடிப்புகளைத் தந்திருக்கு. எப்படி நம்ம முயற்சி தோத்துதுன்னு யோசிக்கணும். ஒரே மாதிரி ரெண்டு முறை தோற்கக்கூடாது. புதுப்புது முயற்சிகள் செய்யணும். செய்த தவறுகளைத் திருத்திகிட்டு மறுபடி கடினமா உழைச்சு முயற்சி செஞ்சா வெற்றி எப்போதும் நமக்கு வசப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us