PUBLISHED ON : டிச 17, 2018

கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து, பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வர, ஆண்டுதோறும் 2 கண்டுபிடிப்பாளர்களுக்கு 'கிராமப்புற விஞ்ஞானி' விருதும், தலா 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்க வேண்டும் என, அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம், அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
அதை ஏற்றுக்கொண்ட அரசு, நடப்பாண்டு முதலே செயற்படுத்த முன்வந்துள்ளது. இது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது.
இதற்கு, வயது வரம்பு, கல்வித் தகுதி எதுவும் கிடையாது. மக்களுக்குப் பயனுள்ள கண்டுபிடிப்புகளை செய்தவர்களுக்கு, இவ்விருது வழங்கப்படும். அந்த வகையில், கிராமப்புற விஞ்ஞானிகளைக் கண்டறிந்து, அவர்களை விருதுக்குப் பரிந்துரை செய்யும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
