தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மூங்கில் காடுகளே!

மூங்கில் காடுகளே!

மூங்கில் காடுகளே!


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூங்கில் என்றதும் புல்லாங்குழலும், அதிலிருந்து வருகிற இனிய ஓசையும் முதலில் நினைவுக்கு வரும். வேறு என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்..

60 ஆண்டுகள் இதன் ஆயுட்காலம். மிகவும் வேகமாக வளரக் கூடியது. ஒரே நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.

வீடுகள் கட்டவும், ஏணிகள் செய்யவும், மூங்கில்கள் பயன்படுகின்றன. மூங்கில் கூடைகள், பிரம்பு நாற்காலிகள், மூங்கில் திரைகள்

எனப் பல பொருட்களில் மூங்கில் பயன்படுகிறது.

மூங்கிலை மரம் என்று சொல்கிறோம். ஆனால், அது புல் இனத்தைச் சேர்ந்ததுதான்! மரங்களைக் காட்டிலும் மூங்கில்கள் 35 சதவீதம் அதிக ஆக்சிஜனை வெளியிடக் கூடியவை. நான்கு பங்கு அதிக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி காற்றைச் சுத்தம் செய்யக் கூடியவை.

மூங்கில்கள் மரக்கூழ் செய்யவும், காகிதத் தொழிற்சாலைகளிலும் பெருமளவு பயன் படுகின்றன.

1,400 மொத்த மூங்கில் வகைகள்.

136 இனங்கள் (ஸ்பீசிஸ்-Species) இந்தியாவில் உள்ளன.

உலகில் நீளமான மூங்கில் பாலம் சீனாவில் 'மின் சியாங்' (Min-chiang) என்ற ஆற்றில் இருந்தது. இந்தப் பாலம் 850 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்டது. ஆயிரம் ஆண்டுகள் வரை பழுதடையாமல் இருந்த இந்தப்பாலம் 1974ஆம் ஆண்டில் இரும்புப் பாலமாக மாற்றப்பட்டது.

மூங்கில்களுக்கு இயற்கையிலேயே பாக்டீரியாக்களையும், பூஞ்சைகளையும் எதிர்க்கும் சக்தி இருக்கிறது. எனவே, இவற்றுக்குத் தனியாக பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவைப் படுவதில்லை. இரும்பைவிட மூங்கிலின் 'இழுவிசை வலு' (டென்சைல் ஸ்ட்ரென்த் -- Tensile Strength) அதிகம்.

மூங்கிலின் மருத்துவக் குணங்களை உணர்ந்ததாலேயே நம் முன்னோர்கள் வீடு கட்டுவதற்கு மூங்கில்களை உபயோகித்தனர்.

மூங்கில் பொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்கவும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மூங்கிலை உபயோகப்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ம் தேதி உலக மூங்கில் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us