உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 26, 2018

அ நிறம் | அளவு
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்ல் ஃபார்லேல்ஸ் (Earl Forlales) என்பவர், மூங்கிலால் ஆன ஒரு வீட்டை நான்கே மணி நேரத்தில் கட்டி, பரிசாக 64,385 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 46 லட்சம்) பரிசு வென்றுள்ளார்.
அந்நாட்டின் தலைநகர் மணிலாவில் மக்கள்தொகை அதிகம். அதில், மூன்றில் ஒரு பகுதியினர், குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். எனவே, தரமான, அதேநேரம் குறைந்த விலையில் நல்ல குடியிருப்புகளைக் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதற்காக, ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் சர்வேயர்ஸ் (Royal Institute of Chartered Surveyors - RICS) எனும் அமைப்பு 'வருங்கால நகரங்களின் வடிவமைப்பு' என்ற தலைப்பில் ஒரு போட்டியை அறிவித்தது. இதில் ஏர்லின் இந்தப் புதிய வீட்டு வடிவமைப்பு முதல் பரிசை வென்றுள்ளது.
