PUBLISHED ON : செப் 04, 2017
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த, கென்ய அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறுவோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் பைகளால் நிலத்தில் ஏற்படும் மாசு ஒருபுறம் எனில், கடல்வாழ் உயிரினங்களும் இதனால் ஏராளமாகப் பாதிக்கப்படுகின்றன. ஏற்கெனவே பல நாடுகளில் இப்பைகளுக்குத் தடை அமலில் உள்ளது. பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது மட்டுமல்லாது தயாரிப்பதும்கூட குற்றம் என்று சொல்லி இருக்கும் கென்ய அரசு, தடையை மீறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சமோ அல்லது 4 ஆண்டுகள் சிறைவாசமோ என்று அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கென்யாவில் வரும் காலங்களில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு பெருமளவு குறையும் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

