உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 03, 2018

அ நிறம் | அளவு
என்னது, காஃபி (Coffee) விற்கத் தடையா? என அதிர்ச்சியடைய வேண்டாம். இங்கு அல்ல. தென்கொரியாவில்!
வரும் 14ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில், காஃபி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாக, தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. கஃபைன் கலந்த உணவுப்பொருட்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் தடை உள்ளது. இனி காஃபிக்கும் அது பொருந்தும். இதுகுறித்து, அந்நாட்டு உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாணவர்களிடம், உறக்கம் வராமலிருக்க, காஃபி அருந்தும் வழக்கம் இருக்கிறது. காஃபியில் இருக்கும் அதிகப்படியான கஃபைன் (Caffein) அவர்களுக்கு மந்தத் தன்மையை உண்டாக்குகிறது. மாணவர்களின் நலனுக்காகவே தடை அறிவிக்கப் பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளது.
