PUBLISHED ON : பிப் 03, 2025

நீங்கள் சொல்ல வருவது ஒரே விஷயமாக இருக்கலாம். ஆனால் எத்தகைய சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள், எந்த தொனியில் (Tone) சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் மனநிலையை மக்கள் புரிந்து கொள்வர்.
உதாரணமாக, ஒரு வாக்கியம்.
You should not bully others.
மற்றவர்களைக் துன்புறுத்தக் கூடாது. இதை வெவ்வேறு சொற்கள் கொண்டு, வெவ்வேறு தொனியில் சொல்லலாம்.
Calm and Informative Tone:
Bullying is wrong because it hurts others and can make them feel very sad.
சாந்தமாக,
மற்றவர்களைத் துன்புறுத்துவது தவறு, ஏனெனில் அது அவர்களைப் பாதிக்கும்.
Serious and Firm Tone:
Bullying is unacceptable. It causes harm and is never the right thing to do.
கடுமையாக,
மற்றவர்களைத் துன்புறுத்துவதை ஏற்க முடியாதது. இது பாதிப்பை ஏற்படுத்தும்.
Concerned Tone:
It makes me really upset to see or hear about bullying. Imagine how you'd feel if someone did that to you.'
அக்கறையுடன்,
துன்புறுத்தல் என்பதைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது. பிறரைத் துன்புறுத்தி, கேலி செய்யும் முன், அது உங்களுக்கு நடந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தியுங்கள்.
Disappointed Tone:
I'm disappointed to hear that someone is being unkind.
சங்கடத்துடன்
யாராவது கனிவுடன் நடந்து கொள்ளவில்லை என்று கேள்விபட்டால் நான் கவலையடைகிறேன்.
Inspiring Tone:
Being kind to others shows true strength. Stand up for someone instead of bringing them down.
உத்வேகத்துடன் :
மற்றவர்களிடம் அன்புடன் இருப்பது தான் வலிமை. யாரையும் தரக்குறைவாக நடத்தாமல், அவர்களுக்கு ஆதரவாக நின்று காட்டுங்கள்.
தொனி நம் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிக்கும். கனிவான தொனி எதிராளியை மகிழ்ச்சிக்குள்ளாக்கும், அதே நேரத்தில் கடுமையான தொனி அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். இதனால்தான் பேசும்போது நாம் பயன்படுத்தும் தொனியில் கவனம் செலுத்துவது அவசியம்.