தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பித்தம் தணிக்கும் பழம்

பித்தம் தணிக்கும் பழம்

பித்தம் தணிக்கும் பழம்


PUBLISHED ON : டிச 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்வம்

ஆங்கிலப் பெயர்கள்: 'பேயல்' (Bael),

'பெங்கால் குவின்ஸ்' (Bengal Quince)

'கோல்டன் ஆப்பிள்' (Golden Apple)

'ஸ்டோன் ஆப்பிள்' (Stone Apple)

'வுட் ஆப்பிள்' (Wood Apple)

'ஜப்பானிஸ் பிட்டர் ஆரஞ்ச்' (Japanese Bitter Orange)

தாவரவியல் பெயர்: 'ஏகிள் மர்மெலோஸ்' (Aegle Marmelos)

வேறு பெயர்கள்:கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம், மகா வில்வம்

பயன்தரும் பாகங்கள்: இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பட்டை, பிசின்

வில்வம் எல்லா வகையான நிலப்பகுதிகளிலும் இடங்களிலும் வளரும் மரம். இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. 'ருடாசியே' (Rutaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மரம், இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. தண்டு, கிளைப் பகுதிகள் முட்களுடன் காணப்படும் இந்த மரம், சுமார், 15 மீட்டர் உயரம் வரை வளரும். நீள் வட்ட வடிவத்தில் மூன்று முதல் ஐந்து இலைகளைக்கொண்ட கூட்டிலைகளை உடையது. இலைப் பரப்பு வழுவழுப்பாக இருக்கும். இலை நுனி பிளவுற்று இருக்கும். கோடைகாலத்தில் மரத்தின் இலைகள் உதிர்ந்து மீண்டும் துளிர்க்கும்.

பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. கெட்டியான ஓடு உடைய பெரிய காய்கள் காய்த்துப் பழுக்கும். ஆப்பிள் வடிவத்தில் இருக்கும் பழத்தின் உள்ளிருக்கும் விதைகள் நீள வடிவத்தில் இருக்கும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் மீரட் பகுதியில், 'காகித வில்வம்' எனப்படும் வில்வ மரத்தின் பழங்கள் உயர் ரகமாக உள்ளன. இதன் பூக்களில் தேன் மணம் கமழும்.

வில்வ மரத்தின் நிழல், காற்று இவை மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. பல கோவில்களில் வில்வ மரத்தைக் காண முடியும். வில்வ மரம் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இயற்கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உடல் பித்தத்தைத் தணிக்கக்கூடியது. இளம் இலைகள், பழத்தில் உள்ள சதைப்பகுதி ஆகியவற்றை நேரடியாக உண்ணலாம். இந்தியா, இலங்கை, நேபாளம், அந்தமான் நிகோபார் தீவுகள் உட்பட பல இடங்களில் வில்வ மரம் பரவலாகக் காணப்படுகிறது.

- கி.சாந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us