PUBLISHED ON : டிச 30, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குயில் மிகவும் இனிமையான ஓசையை எழுப்பும் ஒரு பறவை இனமாகும். ஆனால் இந்த இனிமையான ஓசையை எழுப்புவது நாம் நினைப்பது போன்று பெண் குயில்கள் அல்ல. உண்மையிலேயே பெண் குயிலை விட ஆண் குயில்களே மிகவும் இனிமையாகக் கூவும் இயல்புடையவை.
ஆண் குயில்கள் 15 விதமாக ஒலிகளை எழுப்பும். இவை பெண் குயில்களை ஈர்ப்பதற்காகவே இத்தகைய ஒலியை எழுப்புகின்றன. அதிலும் குறிப்பாக ஆண் குயில்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முதல் 1 ½ மணி நேரம் வரை தொடர்ச்சியாக ஒலி எழுப்பும் தன்மை உடையவை.
ஆண் குயில் எழுப்பும் இசையால் கவரப்படும் பெண் குயில்கள் ஆண் பறவையோடு இணை சேர்கின்றன. அதன்பிறகு பெண் குயில்கள் முட்டையிடத் தொடங்கும். பெண் குயிலானது ஒரு முட்டையை இடுவதற்கும் மற்றொரு முட்டையை இடுவதற்குமான கால இடைவெளி மிகவும் அதிகம்.