sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

உயிரியல் உலகம்: உடலின் மிகப் பெரிய உறுப்பு!

/

உயிரியல் உலகம்: உடலின் மிகப் பெரிய உறுப்பு!

உயிரியல் உலகம்: உடலின் மிகப் பெரிய உறுப்பு!

உயிரியல் உலகம்: உடலின் மிகப் பெரிய உறுப்பு!


PUBLISHED ON : ஏப் 21, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 21, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதத் தோல் உடலின் மிகப் பெரிய உறுப்பு ஆகும். இது உடலின் ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மேற்பரப்பைக் காக்கும் ஓர் உறுப்பு மட்டுமல்ல, உயிரியல், அழகியல் ரீதியாகப் பல பணிகளைச் செய்கிறது.

* தோலின் மேல் பகுதியான எபிடெர்மிஸ் (Epidermis), உடலில் இருந்து நீர் ஆவியாகி வெளியேறுவதைத் தடுக்கிறது, இது நீரிழப்பைத் (dehydration) தவிர்க்க உதவுகிறது.

* தோலில் உள்ள லாங்கர்ஹான்ஸ் செல்கள் (Langerhans cells), பிற நோயெதிர்ப்பு செல்கள் நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன.

* தோல், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. வியர்வை மூலம் உடல் வெப்பத்தை வெளியேற்றுகிறது, குளிர்ந்த நிலையில் ரத்த நாளங்களைச் சுருக்கி வெப்பத்தைத் தக்கவைக்கிறது.

* தோல் உடலை வெளிப்புற அச்சுறுத்தல்களான பாக்டீரியா, வைரஸ்கள், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களில் இருந்து பாதுகாக்கிறது. இது புற ஊதாக் கதிர்களில் இருந்து (UV rays) உடலைப் பாதுகாக்கிறது.

* ஒரு மனிதனின் தோல் 1.52 சதுர மீட்டர் (15 -- 20 சதுர அடிகள்) பரப்பளவு கொண்டது. உடல் எடையில் 15 சதவீதம் வரை இருக்கும்.

* ஒரு சதுர சென்டிமீட்டர் தோலில் ஏறத்தாழ 1,000 வகையான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் வாழ்கின்றன, இவற்றை ஆங்கிலத்தில் ஸ்கின் மைக்ரோபயோம் (skin microbiome) என்கிறார்கள். இவை பெரும்பாலும் தீங்கு விளைவிப்பவை அல்ல, மாறாக நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் பாதுகாக்கின்றன.

* தோலின் நிறம் மெலனின் என்ற நிறமியால் தீர்மானிக்கப்படுகிறது, இது மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. மெலனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. இது தான் ஒவ்வொரு நபரின் தோல் நிறத்தையும் தனித்துவமாக்குகிறது.

* தோல் நெகிழ்ச்சி, மீள்தன்மை கொண்டது. இது நீட்டப்படலாம், சுருக்கப்படலாம் மற்றும் இதனால் சிறிய காயங்களைத் தானாகவே குணப்படுத்த முடியும்.

* தோலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலும் (Hair follicle) ஒரு செபேசியஸ் சுரப்பியுடன் (Sebaceous gland) இணைக்கப்பட்டுள்ளது, இது எண்ணெயை உற்பத்தி செய்து தோலை ஈரப்பதமாக வைத்திருக்கிறது.






      Dinamalar
      Follow us