தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கொள்ளைக்காரப் பறவை

கொள்ளைக்காரப் பறவை

கொள்ளைக்காரப் பறவை


PUBLISHED ON : ஜூலை 31, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலில் பயணிக்கும் கப்பல்களை வழிமறித்துக் கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்களைப் போலவே, மற்ற பறவைகளின் உணவை வழிமறித்து கொள்ளையடிக்கிற பறவையைத் தெரியுமா? ஸ்குவாஸ் (Skuas) என்ற கடற்பறவைதான், இப்படி மற்ற பறவைகளிடமிருந்து பறித்து உண்கிற பழக்கம் உடையது.

ஸ்குவாஸ் என்பது, கடலில் வாழும் ஒரு வகைப் பறவை. தாக்கும் குணம் கொண்டது. டெர்ன் (Tern), பஃப்பின் (Puffin) உள்ளிட்ட மற்ற கடற் பறவைகள், தங்களின் குஞ்சுகளுக்கோ அல்லது கூட்டுக்கோ கொண்டு செல்லும் உணவை, இந்தப் பறவை இடைமறித்து கொள்ளை அடிக்கும். வானில் பறந்துகொண்டே சண்டை போட்டு, மற்ற பறவைகளைக் கொல்லும் இயல்புடையது. சில நேரங்களில் ஸ்குவாஸ் பறவைகள் ஒன்று சேர்ந்து, மற்ற பறவைகளைத் துரத்திச் சென்று வேட்டையாடுவதும் உண்டு. இதனால், ஸ்குவாஸ் பறவைகளைக் கண்டாலே, மற்ற கடற்பறவைகள் கதிகலங்கும்.

அமெரிக்கா, ஆர்டிக் பகுதிகளில் உள்ள ஸ்குவாஸ் பறவைகள், ஒட்டுண்ணிப் பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன. முரட்டுத்தனமாகத் தாக்குதல் நடத்துவது பெரும்பாலும் விலங்குகளிடம் காணப்படும் குணமாகும். மற்ற உயிரினங்களிடம் இருந்து கொள்ளையிட்டுத் தின்பதற்கு, 'கிளிப்டோபாராசிடிசம்' (Kleptoparastism) என்று பெயர். ஸ்குவாஸ் பறவைகளில் சில, கொள்ளை அடிப்பதற்காகவே தனியாக வாழ்கின்றன.

ஆர்டிக் பகுதிகளில் வாழும் ஸ்குவாஸ் பறவைகள், பெரும்பாலும் கடலிலேயே வாழும். இனப்பெருக்கத்துக்கு மட்டும் கோடை காலத்தில் கரைக்கு வரும். ஸ்குவாஸ் குஞ்சுகள் வளர்ந்தாலும் கடலிலேயே இருக்கும். இவை, இனப்பெருக்கத்திற்குத் தயாராக இரண்டு ஆண்டுகள் ஆகும். பொதுவாக, வேட்டையாடப்படும் உயிரினம், முட்டைகள், சிறிய பறவைகள் ஆகியவற்றையே மற்றவை உணவாக உண்ணும். ஆனால், ஸ்குவாஸ் பறவை சிறிய விலங்குகளையும் மீன்களையும் உண்ணும் இயல்புடையது. ஸ்குவாஸ் பறவைகள் நீண்டதூரம் பறக்கவல்லவை. பெரும்பாலான நேரங்களில், கடல் பகுதிகளில் பறந்துகொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்டிக் பகுதியில் குளிர்காலம் தொடங்கியதும், பூமியின் தென்பகுதிக்கு இவை இடம்பெயர்ந்து விடுகின்றன.

-அ.ஆனந்தி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us