PUBLISHED ON : அக் 16, 2017

நகரங்களில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகைக்கரி, மனிதர்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிப்பதோடு, பருவநிலை மாற்றத்திலும் முக்கிய பங்குவகிப்பதாக நீண்டகாலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் காற்றில் கலந்துள்ள மாசு எவ்வளவு என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஆய்வாளர்கள் ஒரு புதுமையான வழியை மேற்கொண்டு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதாவது, சிட்டுக்குருவி, மரங்கொத்தி போன்ற பறவைகளின் இறக்கைகளில் படிந்துள்ள கார்பன் அளவைக் கணக்கிட்டு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவின் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில், எந்தக் காலகட்டத்தில் எவ்வளவு மாசு காற்றில் கலந்துள்ளது என்பதை காலவரிசைப்படி புரிந்துகொள்ள முடியுமென்று ஆய்வாளர்களில் ஒருவரான ஷான் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த ஆய்வுமுறையை மற்ற நாடுகளும் ஏற்றுக்கொண்டால், சூழலியல் மாற்றத்தைச் சரியாகக் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

