PUBLISHED ON : மார் 20, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமீபத்தில், பெப்சி, கோக் உள்ளிட்ட சில குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என்று, பெரும்பாலான தமிழக வியாபாரிகள் முடிவு செய்தனர். இதற்கு மாற்றாக, இளநீரை பெட் பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி நா.பெரியசாமி கூறியதாவது, 'பல்வேறு பிரச்னைகளுக்கு மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுவது இளநீர். இது எல்லாவித காலநிலைகளுக்கும் ஏற்றது. மக்களிடையே, இயற்கையான இளநீர் பருக வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, சுகாதாரமான முறையில், இளநீரை பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்க, விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். கால் லிட்டர் இளநீர் 40 ரூபாய்க்கு விற்கப்படவுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

