உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 13, 2016

அ நிறம் | அளவு
அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுவில் இணைய இந்தியா முயன்று வருகிறது. இதன் மூலம் ஏவுகணை உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முடியும். ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்துள்ள பிரமோஸ் ஏவுகணையை வர்த்தக ரீதியில் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வியட்நாம், பிரேசில், இந்தோனேஷியா, சிலி, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் போன்ற ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன. அதுபோலவே, சீனாவுடன் கடல் எல்லைப் பிரச்னையை சந்தித்து வரும், இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளும் இந்தியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன.
