தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சொந்தமாக வாங்கலாம் சுத்திகரிப்பு நிலையம்!

சொந்தமாக வாங்கலாம் சுத்திகரிப்பு நிலையம்!

சொந்தமாக வாங்கலாம் சுத்திகரிப்பு நிலையம்!


PUBLISHED ON : ஜூலை 01, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொந்தமாக ஒரு கார் வைத்துக்கொள்வது மாதிரி, வீடு வைத்துக்கொள்வது மாதிரி, வருங்காலத்தில் சொந்தமாக கடல்நீரை குடிநீராக்கும் ஜீப் ஒன்றையும் வாங்கிவைத்துக் கொள்ளலாம்.

இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட எளிமையான தொழில்நுட்பம் தான் இந்த ஜீப். கடந்த ஆண்டு, நமது பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவைச் சந்தித்தபோது, இந்த ஜீப்பும் இதன் பயன்பாடுகளும் விளக்கப்பட்டன.

இஸ்ரேல் நிறுவனம் தயாரித்துள்ள ஜீப்பில் பல சிறப்பம்சங்கள் உள்ளன

* இந்த ஜீப்பின் பின்னே உட்கார்ந்திருப்பது பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் சின்ன மாடல்.

* ஜீப்பை எங்கே வேண்டுமானாலும் ஓட்டிக்கொண்டு போகலாம்.

* அதன் எடை மிகவும் குறை. மொத்தமே 1,540 கி.கி. தான்.

* ஆறு, ஏரி, கடல், குளங்கள் என்று எந்த நீராதாரத்தின் நீரையும் எடுத்து இந்த ஜீப் சுத்திகரிக்கும்.

* உலக சுகாதார நிறுவனம் குடிநீருக்கு வகுத்துள்ள தரத்தோடு, இந்த ஜீப் தண்ணீரைச் சுத்திகரித்துத் தரும்.

* அனைத்து வானிலை சூழல்களிலும் இந்த சுத்திகரிப்பு ஜீப் வேலைசெய்யும்.

* ஒரு மணிநேரத்துக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த ஜீப் ஓடும்.

* ஜீப் சுத்திகரிப்பு அமைப்பை இயக்குவதற்கு 2 பேர் போதும். முப்பது நிமிடத்தில் செயற்படத் தொடங்கும்.

* இந்த ஜீப்பிலேயே 1,000 லிட்டர் முதல் 10,000 லிட்டர் தண்ணீரைச் சேமிப்பதற்கான தொட்டி இணைக்கப்பட்டுள்ளது.

* ஒரு நாளில் இந்த ஜீப் சுத்திகரிப்பு நிலையம் 20,000 லிட்டர் கடல்நீரைச் சுத்திகரிக்கும். 80,000 லிட்டர் அழுக்கு தண்ணீரைச் சுத்திகரிக்கும்.

பல்வேறுவிதமான இயற்கைப் பேரிடர் காலங்களிலும் எல்லைக்கு அருகேயுள்ள இராணுவத்தினரும் இந்த ஜீப்பைப் பயன்படுத்தலாம். நல்ல தண்ணீரை அங்கே கொண்டு சேர்ப்பதற்கு பதில், இந்த ஜீப் நல்ல தண்ணீரைச் சுத்திகரித்துக் கொடுத்துவிடும்.

இந்த ஜீப்பின் விலை, அதிகம் இல்லை ஜென்டில்மென்: வெறும் ரூ.70 லட்சம் தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us