PUBLISHED ON : மார் 16, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள 4,282 அரசுப் பள்ளிகளில் ரூ.48 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் புதிதாக 25 ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

