தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சகலகலா சாப்ளின்

சகலகலா சாப்ளின்

சகலகலா சாப்ளின்


PUBLISHED ON : ஏப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சார்லி சாப்ளின் பிறந்த தினம் ஏப்ரல் 16

16.4.1889 - 25.12.1977


கருப்புத் தொப்பி, பொருந்தாத ஷூக்கள் அணிந்த வளைந்த கால்கள், கையில் ஒரு நீண்ட குச்சி, யாரோ மையைத் தெளித்துவிட்டது போன்ற துளி மீசை... சொல்லும்போதே ஒரு கேலிச்சித்திரம் மனதில் உருவாகிறது அல்லவா? வசனங்கள் இல்லாமல் தன் சேட்டைகளால் உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்தான் அவர்!

சிறு வயதில் வறுமையில் வாடிய சாப்ளின், தனது ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். தனக்கென தனித்தன்மை கொண்ட ஒரு நகைச்சுவைப் பாணியை சாப்ளின் உருவாக்கிக் கொண்டார். நகைச்சுவை மன்னரான சாப்ளின் இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறார். சர்க்கஸ், லைம்லைட், தி கிரேட் டிக்டேட்டர் , மாடர்ன் டைம்ஸ், தி கிட் போன்றவை இவரது முக்கியமான படங்கள்.

'டைம்' (Time) இதழ் அட்டையில் இடம்பெற்ற முதல் நடிகர் சார்லி சாப்ளின்.

சாப்ளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'சாப்ளின்' என்ற திரைப்படத்தில் சாப்ளினுக்குத் தாயாக அவருடைய மகள் நடித்திருக்கிறார்.

சாப்ளினை கௌரவிக்கும் விதமாக 1981ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விண்கல்லுக்கு '3623 சாப்ளின்' எனப் பெயரிடப்பட்டது.

ஒரு மாநாட்டுக்காக லண்டன் சென்றிருந்த மகாத்மா காந்தியை 1931ல் சார்லி சாப்ளின் நேரில் போய் சந்தித்திருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us