sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/நறு வீ முல்லை

நறு வீ முல்லை

நறு வீ முல்லை


PUBLISHED ON : அக் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லிகை, முல்லை, ரோஜா, இருவாட்சி என்று விதவிதமான பூக்கள் இருந்தாலும், அனைத்தும் ஒரே காலத்தில் பூப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு பருவம். சில பூக்கள் கோடைக்காலத்திலும், சில மழைக்காலத்திலும் பூக்கும். உதாரணம் முல்லை.

'கார் நயந்து எய்தும் முல்லை' என்பது ஐங்குறுநூறு பாடலின் வரி.

கார் என்பது மழையைக் குறிக்கும். மழைக்காலத்தில் மாலையில் மலர்ந்து நறுமணத்தைக்கொடுக்கும் மலர் முல்லை. முற்காலத்தில் வழிபாட்டிற்கும், வாழ்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

'நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது' இது, முல்லைப்பாட்டின் வரி. தமிழர் வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மங்கல மலராகப் பயன்படுத்தப்பட்டது முல்லை. பெண் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி குடும்பம் நடத்துவதை முல்லை மலரோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளனர்.

'முல்லை சான்ற கற்பின் மெல்லியல்' (அகநானூறு 274) நறு மணமுடைய முல்லை மலர் அணிந்த தலைவி என்று குறிப்பிடுகிறது அந்தப் பாடல்.

தமிழர்களின் ஐந்து நிலங்களில் ஒன்று முல்லை என்பதும் நீங்கள் அறிந்ததே.

சங்க இலக்கியம் கலித்தொகையில் ஒரு பகுதியாக விளங்கும் முல்லைக்கலியில், முல்லைத்திணைக்குரிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

முல்லை என்பது செடி (கொடி) யின் பெயர் எனினும், அதன் பூவிற்கும் அதுதான் பெயர்.

ஒன்றின் பெயர் அதன் உறுப்புக்கும் பெயராகி வருவதை, இலக்கணத்தில் சினையாகு பெயர் என்று குறிப்பிடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us