உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : மே 16, 2016
அ நிறம் | அளவு
தமிழகத்தில், தனித்தனி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'கோ--எட்' எனப்படும் இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக 'ரிப்போர்ட் பீ' எனப்படும் தனியார் அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டில், +2 தேர்வை 6,258 பள்ளி மாணவர்கள் எழுதினார்கள்.
* ஆண்கள் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 59.8 சதவீதம்.
* பெண்கள் பள்ளிகளில் படித்த மாணவியரின் தேர்ச்சி விகிதம் 66.2 சதவீதம்.
* இருபாலர் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 63.6 சதவீதம், மாணவியரின் தேர்ச்சி விகிதம் 66.8 சதவீதம். ஆண்கள் பள்ளியில் படித்த மாணவர்களைவிட, இருபாலின பள்ளியில் படித்த மாணவர்கள் தேர்ச்சி விகித வேறுபாடு 5.3 சதவீதம் அதிகமாக உள்ளது.
