உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 20, 2016

அ நிறம் | அளவு
'ஸ்வச் பாரத்' எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை, நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு மிகத் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட நாடு முழுவதும் 95 இடங்களில் இந்த உரத் தயாரிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பிரச்னை, குப்பைக் கழிவுகள் அதிகம் சேருவதுதான். இந்தக் குப்பைக் கழிவுகளைக் குறிப்பிட்ட பகுதிகளில் கொட்டி வைப்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கழிப்பறைகள் கட்டுவது, தெருக்களில் குப்பை கொட்டுவதைத் தடுப்பது உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
