PUBLISHED ON : ஜூன் 16, 2025

கணினியில் தரவுகள் (Data), நிரல்கள் (Programs) இரண்டும் பைனரி வடிவில், அதாவது 0, 1 எனச் சேமிக்கப்படுகின்றன. இந்தத் தரவுகளைச் சேமிக்க, கணினி பல்வேறு அளவிலான சேமிப்பு அலகுகளைப் பயன்படுத்துகிறது. இவை அளவின் அடிப்படையில் சிறியது முதல் பெரியது வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக பிட் (Bit). இது கணினியின் மிகச்சிறிய சேமிப்பு அலகு. அடுத்ததாக எட்டு பிட்கள் சேர்ந்தது ஒரு பைட். இவ்வாறாகக் கோப்புகளின் அளவுகளைப் பொறுத்து அளவீடுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். கீழே சேமிப்பு அலகுகளின் அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சிறியது முதல் பெரியது வரை வரிசைப்படுத்துங்கள்.
விடைகள்:
1. பைட் (Byte)
2. கிலோபைட் ( KB)
3. மெகாபைட் (MB)
4. கிகாபைட் (GB)
5. டெராபைட் (TB)
6. பெட்டாபைட் (PB)
7. எக்ஸாபைட் (EB)
8. ஜெட்டாபைட் (ZB)
9. யோட்டாபைட் (YB)
10. ப்ரோன்டோபைட் (BB)